போலியான அரச ஆவண தயாரிப்பு : இந்தியாவில் கைதான இலங்கையர்

19

இந்தியாவின் (India) பெங்களூர் (Bengaluru) ராச்சேனஹள்ளியில் போலியான இந்திய அரச ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது வெளிநாட்டினர் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு துறையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர், 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சென்னைக்கு (Chennai) இடம்பெயர்ந்துள்ளதுடன் அங்கு அவர் போலியான இந்திய அரச ஆவணங்களைத் தயாரிக்கும் தனது சட்டவிரோதத் தொழிலை ஆரம்பித்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், சரன் குமார் காளிதாஸ் என்ற உமேஸ் பாலா ரவீந்திரன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது குடியிருப்பில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, பல கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.