பசிபிக் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

19

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் (Oceania) பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 9.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

குறித்த தகவலை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது வனுவாட்டு தீவின் தலைநகரான போர்ட் விலாவிற்கு வடமேற்கு பகுதியில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிலநடுக்கம் சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன் சுனாமி (tsunami) தொடர்பிலான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Comments are closed.