டிரான்-தேசபந்து தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பம்

0 3

முன்னாள்​ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக எனும் போதைப்பொருள் வர்த்தகர், டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 ​கோடி ரூபா லஞ்சம் கோரியதாக நேற்றைய தினம் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.

அதனையடுத்து சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் ஹரக் கட்டாவிடம் மேலதிக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.