பதுளையில் ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

0 2

பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் அடித்தட்டு எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே இலக்கத்தைக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, போலியானது எது என கண்டுபிடிப்பதற்காக முச்சக்கர வண்டிகளை அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில் பல நபர்களிடம் கைமாறிய பின்னரே தற்போதைய உரிமையாளர்கள் அவற்றைக் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.