புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்படி நால்வரும் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவைப் பகுதியில் இருந்து வென்னப்புவ பகுதி கடலுக்கு நீராடச் சென்றவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர்களுள் ஸ்ரீகாந்த் சரன்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவிருப்பதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.