ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

0 2

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வருண ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வருண ராஜபக்சவின் யூடியூப் பக்கத்தில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர ஜனாதிபதி பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமைக் காரியாலயத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகளினால் பாதுப்பான வீடொன்றை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரபூர்வ ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்துவதில்லை என வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன் காரணமாக கொழும்பில் வசிப்பதற்காக, சாதாரணமான வீடொன்று ஜனாதிபதி தரப்பில் தேடப்பட்டு வருவதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.