பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று கூறியுள்ளார்.