காஷ்மீர் – பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி போர்ச் சூழலுடன் காணப்படுவதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு இப்பட்டுள்ளது.
மேலும், இந்திய இராணுவம் மற்றும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.