13 நாட்களில் 60 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்திய நாடு

0 3

கடந்த 13 நாட்களில் எல்லை வழியாக சுமார் 60,000 ஆப்கானிய அகதிகளை பாகிஸ்தான், நாடு கடத்தியுள்ளது என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பான ஐஒஎம் தெரிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 1 மற்றும் 13 வரையிலான காலப்பகுதியில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். டோகாம் மற்றும் ஸ்பின் போல்டோக் எல்லைப் பாதைகள் ஊடாகவே ஆப்கானிஸ்தானுக்குள் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 செப்டெம்பர் முதல் 2.43 மில்லியனுக்கும் அதிகமான ஆவணமற்ற ஆப்கானிய குடியேறிகள் அண்டை நாடுகளான, பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து தங்கள் தாயகமான ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் வலுகட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கம் 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 3 மில்லியன் ஆப்கானியர்களை, அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 7 மில்லியன் ஆப்கானிய ஏதிலிகள் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளடங்கலான வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஆவணமற்ற குடியேறிகள் ஆவர்.

Leave A Reply

Your email address will not be published.