பால் தேநீரின் விலை இன்று(01.04.2025) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த விலை அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.