இலங்கையில் (Sri Lanka) 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க (Kayanta Karunatilaka) நேற்று (18) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரட்டை குடியுரிமைக்காக 63,917 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து ஆராய்ந்தோம்.
2015ஆம் ஆண்டில் 17,126 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 2016 ஆம் ஆண்டில் 14,802 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
2017ஆம் ஆண்டு 9549 பேரும் 2018 ஆம் ஆண்டில் 9,750 பேரும் விண்ணப்பித்துள்ளதோடு 2019ஆம் ஆண்டு 8,702 பேரும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் 3,988 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 63,917 ஆகும் அத்தோடு 2015 ஆம் ஆண்டு 16,184 விண்ணப்பதாரர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு 13,933 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 2017ஆம் ஆண்டு 8,881 பேருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2018 ஆம் ஆண்டு 8,747 வழங்கப்பட்டுள்ளது அத்தோடு 2019 ஆம் ஆண்டு 7,405 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டு 3,154 பேருக்கு வழங்கப்பட்டது.
அதன்படி, 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.