ரஷ்யாவின் ஆயுத கொள்முதல்! இந்தியாவிற்கு அமெரிக்கா எதிர்ப்பு

0 1

இந்தியா- (India) ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ரஷ்யாவின் (Russia) ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிடமிருந்து தனது இராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை வாங்கியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கா கொடுத்த சலுகைக்கு மேலும் டொலருக்கு மாற்றாக உலகளாவிய நாணயத்தை உருவாக்க பிரிக்ஸ் முயற்சிக்கிறது.

இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா உள்ளது. இது அமெரிக்க (United States) -இந்திய உறவுகளை பலவீனப்படுத்துகிறது.

இந்த வகையான விடயங்கள் அமெரிக்கா – இந்தியா இடையே அன்பையும், பாசத்தையும் உருவாக்குவதில்லை.இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பொருட்களுக்கான வரியை பிரதமர் மோடி குறைக்க ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.