இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள புதிய கார்!

0 3

சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவர் காருக்கு சந்தையில் அதிக கேள்வி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரேஞ்ச் ரோவரின் 135 யூனிட்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வலுவான முன்பதிவுகள் இருப்பதால் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அக்சஸ் மோட்டார்ஸின் பொது மேலாளர் சஞ்சய ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த சொகுசு SUVயின் முதல் தொகுதி ஜூன் மாதம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 200க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விலைகள் அதிகரித்ததால், சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவியது.

புதிய ரேஞ்ச் ரோவரின் விலை 147 மில்லியன் ரூபாய். இருப்பினும், சந்தை நிலைத்தன்மை அடையும் போது முன்பதிவுகள் அதிகரிக்கும் என்று சஞ்சய ஜெயசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மாடல் பல்வேறு வெளிப்புற வண்ணங்களில் வந்தாலும், இலங்கையில் இதனை வாங்குபவர்கள் Ostuni White, Fuji White, Batumi Gold மற்றும் Santorini Black போன்ற மிகவும் பாரம்பரியமான தேர்வுகளைத் தேர்வு செய்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.