மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 10 அரசியல் கட்சிகளும் 38 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்
Comments are closed.