பிரான்சின் அடுத்த பிரதமர்? புலம்பெயர்தலை எதிர்க்கும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்

15

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் மக்களிடையே பிரபலமாகிவருகிறார்.

பிரான்சின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான National Rallyயின் கட்சித்தலைவர் ஜோர்டன் பார்டெல்லா (Jordan Bardella, 27). 16 வயதில் கட்சியில் இணைந்த ஜோர்டன், இன்று பிரான்சின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையை எட்டியுள்ளார்.

National Rally கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான Marine Le Pen, கட்சியை நிறுவிய தன் தந்தையான Jean-Marie Le Penஐயே கட்சியிலிருந்து வெளியேற்றியவர். ஆனால், அவர் இன்று கட்சித் தலைமை பொறுப்பை ஜோர்டனிடம் கையளித்துள்ளார்.

ஆக, ஜோர்டன் கட்சி, பிரான்ஸ் மக்களிடையே பிரபலமாகிவரும் நிலையில், அவர் அடுத்த பிரதமராகலாம் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் காணப்படுகிறது. ஜோர்டன் சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர் என்பதால், அவரை 1.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள், அங்கு சென்றாலும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள மக்கள் போட்டி போடுகிறார்கள். தனது சமூக ஊடக இருப்பை, பிரான்ஸ் இளைஞர்களை கவர பயன்படுத்திக்கொள்கிறார் ஜோர்டன்.

ஜோர்டன், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர். அவரது தாய், 1960களில் இத்தாலியிலிருந்து பிரான்சுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.

விடயம் என்னவென்றால், ஜோர்டன் சார்ந்த National Rally கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியாகும். பிரான்ஸ் மெல்ல காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் ஜோர்டனின் தாரக மந்திரம். அதாவது, புலம்பெயர்ந்தோரால் பிரான்ஸ் கலாச்சாரம் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது என்று கூறும் ஜோர்டன், புலம்பெயர்ந்தோர் நம் கலாச்சாரத்தை மூழ்கடித்து, நம் வாழ்க்கைமுறையையே தலைகீழாக மாற்றிவிடுவார்கள் என்கிறார்.

தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரான்ஸ் குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களிலும், புலம்பெயர்ந்தோரை பின்வரிசைக்கு தள்ளிவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளது National Rally கட்சி.

Comments are closed.