ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள அருங்காட்சியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள எகிப்திய ராணி ஒருவரின் சிலையை தனதாக்கிக்கொள்ள 3 நாடுகள் உரிமைகோருவதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சிலைக்காக எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இதற்காக உரிமைகோருகின்றன. நெஃபெர்டிட்டி(Nefertiti) என்ற எகிப்திய பலன்களை இராணி ஒருவரின் சில்லைக்காகவே இவ்வாறு போட்டிகள் உருவாகியுள்ளன.
சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த பெண் அகெனாடென்(Akhenaten) எனும் எகிப்திய மன்னரின் மனைவி ஆவார். ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள அருங்காட்சியம் ஒன்றில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
1924ஆம் ஆண்டு முதல், இந்த சிலை தங்கள் நாட்டிலிருக்கவேண்டும் என எகிப்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரி வருகின்றன.
உலகிலேயே அழகான பெண் என கருதப்படும் நெஃபெர்டிட்டியின் சிலையை, ஜேர்மன் ஆய்வாளரான Ludwig Borchardt என்பவர் ஆய்வொன்றில் மூலம் கண்டுபிடித்ததால், அதை அவர் நேரடியாக ஜேர்மனிக்குக் எடுத்து சென்றுள்ளார்.
ஆனால், அவர் ஒரு எகிப்து ராணி என்றும், அவரது சிலை எகிப்தில்தான் இருக்கவேண்டும் என எகிப்தியர்கள் உரிமைகோருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.