வடக்கை நோட்டமிட திட்டம் வகுக்கும் இந்தியா: கேள்விக்குள்ளாகும் பாதுகாப்பு

17

மன்னார் தீவு உள்ளிட்ட வடக்கின் பல இடங்களில் ஆளில்லா விமானக் கண்கணிப்பு கருவிகளை பயன்படுத்துவதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளமை பெரும் சர்ச்சை தோற்றுவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னாரின் மணல் திட்டுகள், மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களில் ஆளில்லா விமானக் கண்கணிப்பு கருவிகளை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே இந்திய மக்களவைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, கச்சதீவு விவகாரத்தை எழுப்பிய பிரதமர் மோடியை இந்திய காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.

கச்சதீவு விவகாரம் இலங்கையுடனான இந்தியாவின் உறவை சீர்குலைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பாரிய அச்சத்தை உருவாக்கியமைக்காக பிரதமர் மோடி மற்றும் அவரது தரப்பினர் மன்னிப்பு கேட்கத் தயாரா? எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில் மன்னாரில் இந்தியா புதிய திட்டமொன்றை வகுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.