சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியின் நடுவர்கள் இவர்கள் தானா?- இதோ யார் யார் பாருங்க

12

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

கடைசியாக பெரியவர்களுக்கான சீசன் முடிவடைய இப்போது சிறியவர்களுக்கான 10வது சீசன் தொடங்கவுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பமாக போகும் நிலையில் சில புரொமோக்கள் வெளியாகியுள்ளது.

இந்த 10வது சீசனில் போட்டிபோடும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த சூப்பர் சிங்கர் 10வது சீசனின் நடுவர்களாக பாடகர்கள் மனோ மற்றும் சித்ரா ஆகியோர் வழக்கம் போல் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது நடுவர்கள் லிஸ்டில் புதியதாக இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். வரும் சனிக்கிழமை படு பிரம்மாண்டமாக சூப்பர் சிங்கர் 10வது சீசன் மாலை 6.30 மணியளவில் தொடங்க உள்ளதாம்.

Comments are closed.