நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கும் பிரபலம்.
கடைசியாக இவரது நடிப்பில் துணிவு படம் வெளியாகி இருந்தது, அதன்பின் எந்த படமும் ரிலீஸ் இல்லை. ஆனால் அவர் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துவிட்டு குட் பேட் அக்லி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இடையில் கார் ரேஸிற்கான பயிற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.
கார் ரேஸிற்கான பயிற்சி வீடியோக்களை ஷாலினி இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது முரளியின் இளைய மகன் ஆகாஷை வைத்து நேசிப்பாயா என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்த ஒரு பேட்டியில் விஷ்ணுவர்தன் அஜித் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அஜித்தை 2, 3 முறை மீண்டும் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் மிஸ் ஆனது.
ஒருமுறை அழைத்த போது சல்மான் கானுடன் படம் எடுக்கும் சூழல் இருந்தது, பில்லா 3 எடுக்க எனக்கு அழைப்பு வந்தது வேண்டாம் என்றேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க ஆசை என கூறியுள்ளார்.
Comments are closed.