தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாவீரன் படம் வெற்றிபெற்ற நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான அயலான் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனால் ரசிகர்கள் சற்று வருத்தமடைந்த நிலையில், அமரன் படம் மாபெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த இப்படம் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
கடந்த வாரம் வெளிவந்த அமரன் திரைப்படம் அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 189 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் ஷேர் வரும் என கூறுகின்றனர்.
அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயனின் சம்பளம் அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 20 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.
ஆனால், தற்போது அமரன் படத்திற்கு வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 50 கோடி உயரும் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
Comments are closed.