ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்க கூறி வருகின்ற விமர்சனங்களை, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கண்டித்துள்ளார்.
குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை, சஜித் பிரேமதாச பெறமாட்டார் என்று ஜனாதிபதி ரணில் அண்மையில் வெளியிட்ட கருத்தை மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதன்படி ரணில் விக்ரமசிங்க, தம்மை மாத்திரமே, சர்வதேச நிதி நிறுவனங்களைக் கையாளும் திறன் கொண்ட ஒரேயொரு பொருளாதார நிபுணராக நிலைநிறுத்திக் கொள்வதாக மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே குடிமக்களை தவறாக வழிநடத்தும், ரணிலின் அவநம்பிக்கையான முயற்சியாக இந்தக் கருத்துக்களை தாம் நோக்குவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.