வட கொரிய திடீரென குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வட கொரியா வியாழக்கிழமை அதிகாலை பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி இருப்பதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தடை உத்தரவுகளை மீறி, உளவு செயற்கைக்கோளை ஏவுவதில் வட கொரியா தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது.
வட கொரியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் தென் கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு சற்று முன்னதாக நடந்தது. ஆனால் உளவு செயற்கைக்கோளை ஏவுவதில் வட கொரியா தோல்வியடைந்தது.
இந்த உச்சிமாநாட்டில் வட கொரியா தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே வட கொரியா முதலில், தென் கொரிய எல்லையில் பலூன்கள் மூலம் குப்பைகளை கொட்டியது.
பின் சில மணி நேரங்களிலேயே இந்த குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தென் கொரிய இராணுவம், வட கொரியா கிழக்கு நோக்கி சுமார் 10 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியதாக நம்புகிறது, இதை ஒரு தூண்டுதலாக அழைக்கிறது.
மேலும், அவர்கள் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து விவரங்களை பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
ஜப்பானும் இந்த ஏவுகணை ஏவப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது, அத்துடன் இந்த ஏவுகணைகள் தங்கள் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக தெரிவித்துள்ளது.
Comments are closed.