மியன்மார் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025இல் மேலும் பல பேரழிவுகள்!

0 3

2025ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்புக்களில் மியன்மார் நிலநடுக்கம் பற்றியும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கேரியாவைச் சேர்ந்த மறைந்த பாபா வங்கா, தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்தும் அவர் கணித்திருக்கிறார்.

அவற்றில் ஒன்றான மியன்மார் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கம் தற்போது நிகழ்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து நிலநடுக்க எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இந்த ஆண்டின் இறுதி வரை பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களும், இயற்கை சீற்றங்களும் உண்டாகும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

அதற்கமைய, அமெரிக்க மேற்கில் நிலநடுக்கங்கள் மனித சமுதாயத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணிப்பில் இருந்துள்ளது.

அத்துடன், அவரது கணிப்புகளில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலகின் பல்வேறு அம்சங்களில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பார், உக்ரைன் போரில் அவர் முன்னிலை வகிப்பார் என்றும், ஐரோப்பிய நாடுகள் பின்தங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல் ஏற்படக்கூடும் என்றும், உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்திருக்கிறார்.

அதேவேளை, அடுத்து வரும் 3000 ஆண்டுகளில் நடப்பவை தொடர்பில் அவர், கணித்துள்ள விடயங்களும் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, 2028ஆம் ஆண்டு புதிய கண்டு மின்சக்தி கண்டுபிடிக்கப்படும், பசி ஒழியும் மற்றும் வீனஸ் செல்வான் மனிதன் என அந்த கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

2043 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இஸ்லாமிய பெரும்பான்மை ஏற்படும், 2046இல் மனித மாற்று உறுப்புக்களில் ஆய்வகங்களில் சிந்தட்டிக்கில் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

2066இல் சுற்றுச்சூழலை மறுகட்டமைக்கும் ஆயுதத்தை அமெரிக்கா உருவாக்கும் மற்றும் 76களில் சமூகத்தில் சாதி முறை ஒழியும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.