திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்றையதினம்(01.04.2025) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 35, 20, 21, 22, 28 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.