எங்கள் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தலாம்: மேக்ரான் சர்ச்சைக் கருத்து

15


உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே, நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் முதலான உதவிகளைக் கோரி வருகிறது உக்ரைன். ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா முதலான சில நாடுகள் உக்ரைனின் கோரிக்கைக்கு செவிசாய்த்தும் வருகின்றன.

இந்நிலையில், தாங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்குள் இருக்கும் சில தளங்களிலிருந்து உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், அந்த இடங்களை உக்ரைன் திருப்பித் தாக்கக்கூடாது என்று அவர்களைத் தடுத்தால், அவர்களால் எப்படி தங்கள் நகரங்களை பாதுகாக்கமுடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேக்ரான்.

ஆகவே, ரஷ்யாவுக்குள் அமைந்திருக்கும் எந்த ராணுவ தளங்களிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அதே தளங்கள் மீது உக்ரைன் திருப்பித் தாக்குதல் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் மேக்ரான்.

என்றாலும், நாம் வழங்கியுள்ள ஆயுதங்கள், ரஷ்யாவிலிருக்கும் பொதுமக்கள் மற்றும் பிற ராணுவ இலக்குகளைத் தாக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார் அவர்.

Comments are closed.