பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தொிவிக்கையில், “பல புதிய திட்டங்களுடன் ‘அஸ்வெசும’, ‘உறுமய’ போன்ற வேலைத் திட்டங்களின் கீழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் இந்த திட்டங்களை அறிமுகம்படுத்தியுள்ளது.
இந்த நிவாரணங்களை கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இலங்கைக்காக வௌிநாடுகளில் பாடுபடுவோரின் குடும்பங்களை பலப்படுத்தும் நோக்கத்திலும் அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை செயற்படுத்துகிறது.”என சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.