கிளிநொச்சி (Kilinochchi) ஆனையிறவு உப்பள தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பல்வேறு கோரிக்கைககளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும்(16) போராட்டம் இடம்பெற்ற நிலையில் அங்கு பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆனையிறவு உப்பளத்தின் முன்பாக முன்னெடுத்து இருந்தனர்.
இந்தநிலையில், போராட்டத்தை தடை செய்யுமாறு கோரி நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.