சிங்கள அரசால் ஈழத் தமிழ் இனத்திற் கெதிராக அரங்கேற்றப்பட்ட மிகப் பெரும் அழிப்பு முள்ளிவாய்க்கால்

0 3

சிங்கள அரசால் ஈழத் தமிழ் இனத்திற் கெதிராக இன்று வரை அரங்கேற்றப்படும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பின் மிகப் பெரும் தமிழின அழிப்பாக அமைந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வானது பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 14/05/2025 ஆகிய தினம் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் தமிழ் அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டது.

இதில் பிரித்தானியாவின் பிரதான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித நேய செயற்பாட்டாளர்களும் கலந்து உரையாற்றி இருந்தார்கள். இதில் அனைத்துலக இளையோர் (TYO) அமைப்பின் உதவிப் பொறுப்பாளர் செல்வி மதுசாவும்இணைந்துஉரையாற்றிஇருந்தார்.

அவரின் உரையானது இனவழிப்பின் வரலாற்றுப் பதிவுகளையும் இதற்கான நீதிக்காக பிரித்தானியா காத்திரமான பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதோடு வட்டுக் கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அமையப்பட வேண்டும் என்று காத்திரமான கருத்துக்களை முன்வைத்து தனது உரையை உணர்புபூர்வமாக வழங்கி இருந்தார்.இளையோர்களின் தாயக விடுதலை பற்றிய தெளிவான சிந்தனையும் அதற்கான ஈடுபாட்டையும் பார்த்து நிகழ்வில் வருகை தந்தவர்களால் பாராட்டப்பட்டத

Leave A Reply

Your email address will not be published.