பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

0 1

பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகளுக்குள் பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது பிரசார காலம் நிறைவடைந்ததன் பின்னரும் பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு கட்சி ஆதரவாளர்களை ஹரினி தூண்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதன் அடிப்படையிலேயே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து கட்சிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாரதூரமான அளவில் தேர்தல் சட்டங்களை மீறியதாகவும் இதன் ஊடாக அவர் பிழையான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாகவும் அந்த உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஏனைய எந்தவொரு எதிர்க்கட்சியோ அதிகாரபூர்வமாக கருத்துக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.