பாகிஸ்தான் தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்!

0 0

இந்தியா – பாகிஸ்தான் முறுகல் நிலையின் சமீபத்திய தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மூன்று விமானப்படைத் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதுடன், பஞ்சாப் மாகாணத்தின் ஷோர்கோட்டில் அமைந்துள்ள ரஃபிகி விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தலைநகரான லாகூரிலிருந்து சுமார் 250 கி.மீ (150 மைல்) தொலைவில் உள்ளது என்று பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 120 கி.மீ (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள சக்வால் நகரில் உள்ள முரித் விமானப்படை தளத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைக்க இந்தியா விமானங்களில் இருந்து ஏவுகணைகளை தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இராணுவ அமைப்புக்கள் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளனதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.