சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றியடைந்த நாடுகள் கிடையாது

0 1

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடைந்த நாடுகள் உலகில் கிடையாது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 94 நாடுகள் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இதில் 92 நாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பல நாடுகள் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றியடைந்த நாடுகள் கிடையாது | Imf Agreement Sucess Says Npp

தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் மக்களின் கழுத்தை நெரிக்கும் என பலர் காத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பாதகம் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்களின் வாழ்க்கை பூரண செழிப்படையவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.