இந்தியாவிடம் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை

0 0

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியா செய்த பரிந்துரையை நிராகரித்ததாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாருக்கும் திருகோணமலைக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மானத்திற்கும் எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த திட்டங்களுக்கு இணங்கியிருந்த போதிலும் தமது அரசாங்கம் இந்த யோசனைகளை நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது மற்றும் திருகோணமலை – மன்னார் அதிவேக நெடுஞ்சாலை என்பனவற்றினால் நாடு பிளவடையக் கூடிய நிலைமை ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் திருகோணமலை சக்தி வள திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பொருளாதார நிலைமைகள் சமமானதாக காணப்பட்டால் பாலம் அமைப்பதில் பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாலம் அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நிலை சமமானதாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.