முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயலாளர் புதிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் தங்களின் பயன்பாட்டுக்கென இரண்டு வாகனங்களை மட்டும் வைத்துக் கொண்டு மேலதிக வாகனங்களை அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு குறித்த அறிவுறுத்தல் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் தரப்பில் இருந்து எதுவித பதிலும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.