இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்

0 1

இன்னும் சில மாதங்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து வருகின்றது. சரிவடையும் பொருளாதாரத்தை யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

கோட்டாபய இரவில் குழியில் விழுந்தார். பகலில் அநுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் இல்லை. அப்படியானால் மீதமுள்ள ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவே.

ரணிலால் மாத்திரமே இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப முடியும். அவரால் மாத்திரமே அதற்கான தலைமை உள்ளது. அந்த சுயபலத்துடன் நாங்கள் போராடுகிறோம்.

இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித | Ranil To Be Sl President Again Rajitha Senaratne

ரணிலை விரைவில் திரும்பக் கொண்டு வரும் நாள் நமது நாட்டைக் கட்டியெழுப்பும் நாளாகும். நாங்கள் அதைத் தாமதப்படுத்தினால், எங்கள் நாடு அழிவின் விளிம்பிற்குச் செல்லும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.