பிரதமர் ஹரினியின் ஆடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

0 1

பிரதமர் ஹரினி அமரசூரிய வெளிநாட்டு விஜயத்தின் போது அணிந்திருந்த ஆடை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

அண்மையில் பிரதமர் ஹரினி பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் அதிகாரபூர்வமான ஆடைகளை அணியாது சென்றிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களிலும் இந்த ஆடை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் கேலிச் சித்திரங்களும் வரையப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பிரதமர் பதவி வகிக்கும் ஒருவர் இவ்வாறு ஆடை அணிந்து செல்வது நாடு என்ற வகையில் ஏற்புடையதல்ல என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி அல்லது பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்பவர்கள் இதை விடவும் சீரான முறையில் ஆடை அணிந்து சென்றிருந்தார் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரதமர் ஹரினியின் ஆடை முறை மற்றும் அவரது எளிமைத்தன்மை தனிப்பட்ட ரீதியில் தமக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஹரினி ஆடை அணியும் விதத்தை நான் விரும்புகின்றேன் அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் விதம் எனக்கு பிடிக்கும் என இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.