கொழும்பு விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு

0 4

கொழும்பு காஸல் வீதி மகளிர் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட புதிய விந்தணு வங்கிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த வங்கியின் ஊடாக ஏற்கனவே 6 பெண்கள் பயனடைந்துள்ளனர். கணவன்-மனைவி உறவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த வங்கி புதிய நம்பிக்கை வழங்கியுள்ளது.

இது இலங்கையில் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் குமார தன்தநாராயண தெரிவித்துள்ளார்.

அண்மையில் திறக்கப்பட்ட விந்தணு வங்கிக்காக ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது விந்தணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.

இதன் மூலம், சுமார் 200 பிள்ளையில்லா பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விந்தணு வங்கியின் பிரதான நோக்கம் குழந்தை பெற முடியாமல் பாதிக்கப்பட்ட தந்தை-தாய்மார்களுக்கு உதவுவதே. விந்தணு தானம் செய்ய விரும்பும் ஆண்கள் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை கடந்து செல்ல வேண்டும்,” எனவும் டொக்டர் தன்தநாராயண குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனைக்கு தினசரி விந்தணு தானம் குறித்து பல தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், தேவையான தகவல்களை மருத்துவமனை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.