இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) வருகையையொட்டி, கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
“இந்தியப் பிரதமரின் வருகையின் விளைவாக, இலங்கை பொலிஸ் சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தும்.
இதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலை ஆகியவை அவ்வப்போது மூடப்படும்.
அந்தக் காலகட்டத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் பயணிகள் இந்த தற்காலிக சாலை மூடல்களைக் கவனித்து அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள் என அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
ஏப்ரல் 5ஆம் திகதி, காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்லையை சுற்றியுள்ள சாலைகளும் அவ்வப்போது மூடப்படும்.
இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவையும் கோருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.