இலங்கை மக்களுக்கு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை

26

இலங்கையில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கும் போது அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து தகவல் இருந்தால், அவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்தார்.

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வாசனை, நறுமணம், நிறம் மற்றும் பொதுவான தோற்றம் குறித்து நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொதியிடப்பட்ட பொருட்களை வாங்கும் போது பொதியிடல், லேபிள் மற்றும் அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கவனம் செலுத்த வேண்டும் என சங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments are closed.