வெள்ளிக்கிழமை மியான்மரை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஐந்து நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம், புவியியலாளர்கள் முன்னர் அடையாளம் கண்டுள்ள, சாகைங் பிளவு(Sagaing Fault) எனப்படும் ஒரு பெரிய நிலத்தடி பிளவின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் அதிர்வுகள் மியான்மர், இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் சீனாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இறப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டலாம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு அரசாங்கம் எல்லாவற்றையும் தணிக்கையுடன் அறிக்கை செய்து வருகிறது.
மேலும் இதுவரை அவர்கள் 144 பேர் இறந்ததாகவும் 732 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மியான்மரில் பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள பாறைகளில் ஒரு பெரிய பிளவு உள்ளது என்றும், அது நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பரவியுள்ளது எனவும் ஆயடவாளர்கள் கூறியுள்ளனர்.
மியான்மரில் உள்ள சகாயிங் நகருக்கு அருகில் இது கடந்து செல்வதால், புவியியலாளர்கள் இந்தப் பிளவுக்கு “சாகாயிங் பிளவு” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் பிளவு நாட்டின் வடக்கிலிருந்து தெற்காக 1,200 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளதான கூறப்படுகிறது.
சாகைங் பிளவு “ஸ்ட்ரைக்-ஸ்லிப்” வகை அதிர்வாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் பொருள், அதன் இருபுறமும் உள்ள பாறைகள் மேலே அல்லது கீழ் நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, கிடைமட்ட திசையில் ஒன்றையொன்று கடந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிளவு அந்தமான் கடலில் இருந்து இமயமலை அடிவாரம் வரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்றும் பூமியின் டெக்டோனிக் தகடுகளின் இயக்கம் காரணமாக உருவாக்கப்படுகிறது.
இந்தியத் தட்டு வடகிழக்கு திசையில் நகர்ந்து, சாகைங் பிளவுப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தியதன் காரணத்தால், பூமிக்கு அருகிலுள்ள பாறைகள் சரிய காரணமாகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையிலேயே மியான்மரில் 7.7 ரிக்ட்ர் அளவான நிலநடுக்கத்தை சாகைங் பிளவு ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டில், இந்தப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவுகோலில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும், 1930 மற்றும் 1956 க்கு இடையில், சாகிங் ஃபால்ட்டில் ரிக்டர் அளவுகோலில் 7 ரிக்டர் அளவுகோலில் ஆறுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று காலை 11:50 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.
அதைத் தொடர்ந்து 12 நிமிடங்களுக்குப் பிறகு ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது.
மியான்மரின் மண்டலே நகரில் பல கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளன.
இதற்கிடையில், வரலாற்று சிறப்புமிக்க அரச அரண்மனையான மண்டலே அரண்மனையின் சில பகுதிகள் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன.
மேலும், பல கோயில்கள் சேதமடைந்துள்ளதாகவும், சகாயிங் பிராந்தியத்தின் சகாயிங் நகரில் உள்ள ஒரு பாலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் நய்பிடாவைத் தவிர, கியூக்டே, பைன் ஓ ல்வின் மற்றும் ஷ்வெபோ ஆகிய இடங்களிலும் நிலநடுக்கத்தின் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த நகரங்களின் மக்கள் தொகை 50,000ஐ தாண்டியதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்து தலைநகர் பெங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி கட்டிடம் ஒன்று நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடத்தில் சுமார் 400 ஊழியர்கள் பணிபுரிந்ததாகவும், அவர்களில் 80 பேர் காணாமல் போயுள்ளதாகவும், மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்ப அறிக்கைகள் 43 பேர் இறந்ததாகக் குறிப்பிட்டாலும், பெங்காக் தாக்கத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிட்சானுலோக் ஷினாவத்ரா, இந்த பாரிய அழிவு காரணமாக அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா,மற்றும் தென்மேற்கு சீனாவிலும் உணரப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா, இம்பால், மேகாலயா மற்றும் கிழக்கு கார்கோ மலை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
டாக்கா, சிட்டகொங் உள்ளிட்ட வங்கதேசத்தின் பல பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த ஐந்து நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மக்கள் நிலநடுக்க அச்சுறுத்தலுக்கு பயந்து தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் “சிவப்பு பிரிவில்” சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இறப்புகள் 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என்பதையே ஆய்வு மையம் இதன் மூலம் கூறியுள்ளது.
அந்த பகுப்பாய்வின்படி, அத்தகைய இறப்பு எண்ணிக்கையின் நிகழ்தகவு 34% என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை சமீபத்திய ஆண்டுகளில் தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக ஏற்கனவே கருதப்படுகிறது.