புலம்பெயர் மக்களை பிரித்தானியாவுக்குள் கொண்டு செல்லும் பிரான்ஸ் பொலிஸார்

0 5

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதற்கு பிரான்ஸ் பொலிஸார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடபிரான்சில் உள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று கிளம்பியுள்ளது.

இந்நிலையில், படகு பிரித்தானிய கடல் எல்லையைத் தொட்ட நேரத்தில், பிரெஞ்சு பொலிஸார் அந்தப் படகிலிருந்த 24 பேரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு பிரெஞ்சுக் கரைக்குத் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து புறப்படும்போது, அந்த படகில் எஞ்சி இருந்தவர்களிடம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காத்திருங்கள், பிரித்தானிய அதிகாரிகள் உங்களை மீட்பார்கள் என்று கூறிவிட்டு பிரெஞ்சு அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 பேர் அந்த சிறிய படகில் இருந்ததால், ஒருவேளை படகு கவிழ்ந்து விடலாம் என்பதாலேயே படகிலிருந்து 24 பேரை மாத்திரம் திருப்பி அழைத்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், பிரான்ஸ் அதிகாரிகள் 24 பேரை மாத்திரம் திருப்பி அழைத்துக் கொள்ளமுடியும் என்றால், மொத்த புலம்பெயர்வோரையும் தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள வேண்டியது தானே என பிரித்தானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் வெளிப்படையாகவே உதவுவதாக பிரான்ஸ் மீது பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.