யாழ்ப்பாணத்தில் (Jaffna) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நல்லூர், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று (23.03.2025) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா, கொடுப்பனவை கொடுப்போம் என சொல்வது கொலையை மறைக்கவே, சர்வதேச நீதி கிடைக்குமா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் ஏராளமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.