ஈரான் மீது அமெரிக்கா செலுத்தும் கடுமையான அழுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், இது இலங்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.
அந்தவகையில், உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 72 டொலர்களைத் தாண்டியுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை நேற்று (22) 72.16 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
இந்த சூழ்நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.