முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் கைது

0 19

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1600க்கும் மேற்பட்டோர் சமீப நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளில் பணியாற்றி, சட்டரீதியாக அவற்றில் இருந்து விலகாத நிலையில் கடமைக்குச் சமூகமளிக்காத சிப்பாய்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையொன்று தற்போதைய நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களில் அவ்வாறு முப்படைகளில் இருந்து தப்பியோடிய சிப்பாய்கள் பலர் தொடர்புபட்டிருப்பது தெரியவந்ததை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் தற்போதைக்கு முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1606 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் ​மேற்கொண்ட தேடுதல்களில் 1444 பேரும் பொலிசார் மேற்கொண்ட தேடுதல்களில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1394 இராணுவச் சிப்பாய்கள், 136 விமானப்படைச் சிப்பாய்கள், 72 கடற்படைச் சிப்பாய்களும் உள்ளடங்கியிருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.