தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்

0 35

பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிறைச்சாலையின் தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நேற்று இரவு தும்பர சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தும்பரை சிறைச்சாலையில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள தனி அறையில் தேசபந்து தென்னகோன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேல் மாடி அறையில் 8 பேர் வரை தங்க முடியும் என்றும், தற்போது அங்கு அடைக்கப்பட்டிருப்பவர் அவர் மட்டுமே என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.