உலக மகிழ்ச்சி அறிக்கை: சரிவை சந்தித்துள்ள இலங்கை

0 7

இவ்வருடத்திற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி, இலங்கை 2024இல் 128வது இடத்தில் இருந்து, 2025இல் 133வது இடத்திற்கு சரிந்துள்ளது.

உலக மகிழ்ச்சி அறிக்கையில் மொத்தம் 147 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

உலக மகிழ்ச்சி அறிக்கை என்பது உலகளாவிய நல்வாழ்வு மற்றும் அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த உலகின் முன்னணி வெளியீடாகும்.

உலக மகிழ்ச்சி அறிக்கை, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள நல்வாழ்வு ஆராய்ச்சி மையத்தால், கேலப், ஐ.நா. நிலையான மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பு மற்றும் ஒரு சுயாதீன ஆசிரியர் குழுவுடன் இணைந்து வெளியிடப்படுகிறது.

அதிகரித்து வரும் சமூக தனிமை மற்றும் அரசியல் துருவமுனைப்புக்கு மத்தியில், உலக மகிழ்ச்சி அறிக்கையின் 2025 பதிப்பில் அமெரிக்கா அதன் மிகக் குறைந்த தரவரிசைக்கு சரிந்தது, அதே நேரத்தில் பின்லாந்து மற்றும் பிற நோர்டிக் வட துருவ நாடுகள் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.

பின்லாந்து இந்த ஆண்டு முதலிடம் பெற்றுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, கொஸ்டாரிகா, நோர்வே, இஸ்ரேல், லக்சம்பர்க் மற்றும் மெக்சிக்கோ ஆகியவை உள்ளன.

குறியீட்டின் கீழ் பகுதியில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து சியரா லியோன், லெபனான், மலாவி, சிம்பாப்வே, பொட்ஸ்வானா, கொங்கோ ஜனநாயக குடியரசு, ஏமன், கொமொரோஸ் மற்றும் லெசோதோ ஆகியவை உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.