தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான நற்செய்தி

0 2

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, திருத்தப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய விண்ணப்பப் படிவம் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பதாரர்களை அதனை அதிபரிடமிருந்து பெற்று பெற்றோர்களால் முறையாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிபருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுடன், அவர் 2025.03.25 க்கு முன் விண்ணப்பங்களை நிகழ்நிலையில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

குறித்த அறிவிப்பானது, மறுபரிசீலனை முடிவுகளின் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவர்களின் பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கு அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.