ஐபிஎல் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை அணி படைத்த சாதனை

0 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 2025 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

2025 ஐபிஎல் தொடர் இந்த மாதம் மார்ச் 22ஆம் திகதி முதல் மே 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் ஐபிஎல் அணியாக 17 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று அசத்தியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

எம்.எஸ் டோனி(M.S.Dhoni) என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்வதற்கு காரணம் என்பது தான் உண்மை.

இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணித்தலைவர; பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் அணித்தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார்.

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.

எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.