இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான இரு நிலநடுக்கங்கள்!

25

இந்தியாவின் (India) – வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மணிப்பூரில் இன்று (05) காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதலாவது நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மையப்பகுதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக்கிலிருந்து கிழக்கே 44 கி.மீ தொலைவிலும், 110 கி.மீ ஆழத்திலும் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பக்கத்திலுள்ள மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதியம் 12.20 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் பதிவான 2 ஆவது நிலநடுக்கம் கம்ஜோங் மாவட்டத்தில் 66 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed.