இரவு நேரத்தில் நடந்த பயங்கரம் – 7 பேரின் உயிரை போராடி காப்பாற்றிய இளைஞன்

0 2

கதிர்காமத்திற்கு யாத்திரைக்கு சென்ற போது விபத்துக்குள்ளான 7 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கதிர்காமத்தில் உள்ள நீலகாராம விகாரைக்கு முன்னால் பாயும் மெனிக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரும்புப் பாலத்திற்கு அருகில், யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

உள்ளூர் இளைஞர் ஒருவரின் வீரச் செயல்களால், வாகனத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டனர்.

வேனின் ஓட்டுநர், நீர்கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு வந்து கிரிவெஹெர விகாரையில் வழிபாடு செய்துவிட்டு, முதலாம் திகதி இரவு சுமார் 10.00 மணியளவில் தங்கும் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஏழு பேரை ஏற்றிச் சென்ற வேன், நீலகாராம விகாரைக்கு முன்னால் உள்ள பாலம் அருகே மெனிக் ஆற்றில் விழுந்துள்ளது.

இதன் போது குறித்து ஏழு போரையம் காப்பாற்றிய கதிர்காமத்தை சேர்ந்த இந்திரஜித், இந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

வேன் ஆற்றில் விழுந்த பிறகு, ஒரு கும்பலின் அலறல் சத்தம் கேட்டு அதை நோக்கி ஓடினேன். ஒரு வாகனம் ஆற்றில் விழுவதையும், கவிழ்ந்த வாகனத்தின் ஜன்னல்களுக்கு வெளியே தலைகள் நீட்டிக் கொண்டு அலறிக் கொண்டிருந்தவர்களை கண்டேன்.

அந்த நேரத்தில், நான் பாலத்தின் மேலிருந்து ஆற்றில் குதித்தேன். முதலில் அங்கிருந்த மூன்று சிறுவர்களை காப்பாற்றி அவர்களைக் கரைக்குக் கொண்டு வந்தேன்.

பின்னர் அங்கிருந்த வயதான பாட்டியைக் காப்பாற்றச் சென்று அவரையும் கரைக்குக் கொண்டு வந்தேன். பின்னர் மற்றொரு பெண்ணும் இரண்டு ஆண்களும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

வாகனம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட வாய்ப்பிருந்ததால், அவர்கள் ஒரு கயிற்றைக் கொண்டு வந்து கரையில் இருந்த ஒரு மரத்தில் வாகனத்தைக் கட்டினர்.

நான் ஆற்றில் குதித்தபோது, என் முழங்கால் ஆற்றில் இருந்த ஒரு பாறையில் மோதியது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றிய பிறகுதான் எனக்கு வலி ஏற்பட்டது.

இப்போது என்னால் நடக்கவே முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். 7 உயிர்களை காப்பாற்றிய இளைஞனை பாராட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.