தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

0 3

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (03) வெளியிட்டுள்ள நாணமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.05 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 299.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365.43 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 379.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301.42 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 313.86 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.26 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 208.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.18 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில், NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.291.50 இலிருந்து ரூ.291.40 ஆகவும், விற்பனை விலை ரூ.299.50 இலிருந்து ரூ.299.40 ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி ரூ. 291.74 முதல் ரூ. 292.38 இற்கும் ரூ.302.21 முதல் ரூ.302.87 முறையே பதிவாகி இருப்பதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 291.18 முதல் ரூ. 291.96 வரையிலும் விற்பனை பெறுமதி ரூ. 300.75 முதல் ரூ. 301.50 என்றவாறாகக் காணப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.